வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து மோட்டார் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday 10 October 2017

வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து மோட்டார் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து, மோட்டார் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு வேலுச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘மோட்டார் வாகனத் தொழிலை கார்ப்ரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில், மோட்டர் வாகன சட்ட திருத்தங்கள் கொண்டு வந்த மத்திய அரசை கண்டிக்கிறோம்.
மேலும் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும்.
பிளஸ் டூ பாஸ் செய்தவர்களுக்கு மட்டும் லைசென்ஸ், ஆதார் அட்டையுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைத்தல், 15 ஏக்கர் பரப்பளவில் ஓட்டுனர் பயிற்சி மையம் அமைத்தல், லைசென்ஸ் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட 45 திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தும் நிர்வாகிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here