மெரசல்... - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday 10 October 2017

மெரசல்...

மெர்சல் – படம் பார்த்த மலேசிய தணிக்கை குழுவின் விமர்சனம்

‘தெறி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி – ‘தளபதி’ விஜய் காம்போவில் பரபரப்பாக ரெடியாகி வரும் படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61-வது படமான இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய் முதன்முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்கிறார். ‘தளபதி’க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3 நாயகிகள் நடித்துள்ளார்கள்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியான இதன் பாடல்களும், டீஸரும் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.

இந்நிலையில், இந்த படத்தை மலேசியாவில் வெளியிட மலேசிய தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. படத்தை தணிக்கை செய்த அதிகாரிகள், மெர்சல் படத்தில் நரம்பு சிலிர்க்கும் காட்சிகள் பலதரப்பட்ட ரசிகர்களை கவரும் என்றும், படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதாகவும் கூறியுள்ளதாக மலேசிய சினிமா ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here