சரக்கு விலை அதிரடி உயர்வு- குடிமகன்கள் அதிர்ச்சி..!! - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday 9 October 2017

சரக்கு விலை அதிரடி உயர்வு- குடிமகன்கள் அதிர்ச்சி..!!

புதுச்சேரி  அரசின்  கலால் வரித்துறை  திடீரென  கலால் வரியை உயர்த்தியதால், மதுபானங்களின் விலை அதிரடியாக  உயர்ந்துள்ளது. இதன் காரணமாக  குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி  என்றாலே, மதுபானத்திற்கு  எவ்வளவு பெயர் போனது என உலகமே அறிந்த ஒன்று.
அதற்கு குறிப்பாக, இரண்டு  காரணங்கள் சொல்லலாம்:
1 . புதுவையில்  கிடைக்காத  மதுபானங்களே கிடையாது
2. விலையும் மிகவும்  குறைவு...
இந்த  இரண்டு பிளஸ் பாய்ன்ட் சொல்லலாம், எதற்கு பொதுவாகவே  மக்கள் புதுச்சேரிக்கு  செல்கிறார்கள் என்று....
இந்நிலையில் புதிதாக  அமலுக்கு  வந்த  கலால் வரியால்,  புதுவையில் மதுபானங்களின்  விலை அதிரடியாக  உயர்ந்துள்ளது. இது குறித்த அரசாணை நேற்று வெளியிட்டது புதுச்சேரி அரசு.
புதுசேரியை பொறுத்தவரையில், 450-கும்  மேற்பட்ட  மதுபான கடைகள், 96 சாராய கடைகள், 75 கள்ளு கடைகள் பதியப்பட்டு உள்ளன.



மதுவகைககளை பொறுத்தவரை ரம்,பிராந்தி,ஓட்கா,பீர்,விஸ்கி என  சுமார் 1300-கும்   மேற்பட்ட  மதுபானங்களை  விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுக்கு ஒரு முறை-
புதுச்சேரியை  பொறுத்தவரை 3 வருடத்திற்கு ஒரு முறை  கலால் வரியை   மாற்றி அமைக்கப் படுவது  வழக்கம். அதன்படி  இந்த ஆண்டு  கலால் வரி சீரமைக்கப்பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்  அனைத்து பொருட்களின்   விலையும் அதிகரிக்கும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.
விலை  விவரம் -
விஸ்கி ரூ 68 லிருந்து  -ரூ 75 கும்
ரம்  ரூ  78 லிருந்து - ரூ 90 கும்
பிராந்தி ரூ 85லிருந்து   -ரூ 100 கும்   உயர்ந்துள்ளது. தோரயமாக சொல்ல  வேண்டும் என்றால், 20  ரூபாய்  வரை உயர்ந்துள்ளது  என  கூறலாம். இந்த   விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு  வந்துள்ளது . இந்த  தகவலால்  குடிமகன்கள் கடும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.
இதுகுறித்த உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்!

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here