அறிமுகமாகிறது 'விவோ S1' - உங்கள் காலெண்டரில் தேதியை குறித்துக்கொள்ளுங்கள் என்கிறது சீனா நிறுவனம்! - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday 26 July 2019

அறிமுகமாகிறது 'விவோ S1' - உங்கள் காலெண்டரில் தேதியை குறித்துக்கொள்ளுங்கள் என்கிறது சீனா நிறுவனம்!


சீனா நிறுவனத்தின் அறிவிப்பின்படி 'விவோ S1' ஆகஸ்ட் 7 ஆம் நாள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. விவோவின் இந்த S-தொடர் ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது. மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர், 128GB சேமிப்பு அளவு, 4,500mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை இந்த S-தொடர் ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.

'விவோ S1' - விலை பட்டியல்:

இந்த ஸ்மார்ட்போன்னின் விலை பற்றி எந்த ஒரு தகவலும் வெளி வராத நிலையில், இந்தோனேசியாவில் விற்கப்பட்ட அதை விலையில் இந்தியாவிலும் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் Rs.17,800 ற்கு விற்கப்படலாம் என கூறப்படுகிறது. இது பச்சை மற்றும் நீலம் ஆகிய இரு வண்ணங்களில் அறிமுகமாகவிருக்கிறது.

'விவோ S1' - சிறப்பம்சங்கள்:

'விவோ S1' ஸ்மார்ட்போன் ஃபன்-டச் ஓ.எஸ் 9 (Funtouch OS 9) உடன், ஆண்ட்ராய்டு 9 அமைப்பை கொண்டு செயல்படுகிறது. 3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ள 'விவோ S1' ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இதன் தனித்துவமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here