கட்டிப்பிடி வைத்தியர் கிட்டயே மருத்துவ முத்தமா? - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday 26 October 2017

கட்டிப்பிடி வைத்தியர் கிட்டயே மருத்துவ முத்தமா?


கட்டிப்பிடி வைத்தியர்  கிட்டயே  மருத்துவ முத்தமா? 


          நேற்றைய  பிக் பாஸ் நிகழ்ச்சி (6/8/17) பரபரப்புக்கு  பஞ்சம்  இல்லாமல் நகர்ந்தது. ஓவியாவின் இந்த நிலைக்கு காரணமான ஆரவ், ஜூலி, காயத்ரினு தன் கேள்விகளால் வெளுத்து வாங்கிட்டாரு நம்ம கமல்.

மழுப்பிய ஆரவ் 

         ஆரவ்விடம் பேசிய கமல்  ஓவியாவின் இந்த நிலைக்கு காரணம் என கேள்வி எழுப்பினார். அவரும் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்று அறியாதது  போல் "அவங்க மைண்ட் அப்செட் ஆகவே இருந்தாங்க ஏன்னு எங்களுக்கு சரியாக  தெரியல",  அப்டினு பயங்கரமா மழுப்புனாரு, கமல் எதிர்பார்த்த விஷயம்  அவர் வாயிலிருந்து வெளியே வரவே இல்லை.
                                 



 ஓவியா கேட்டத குடுத்தீங்களா? 

          இதனால் கமல் அவரிடம் அதைப்பற்றி டைரக்டாகவே கேட்டுட்டாரு. அதுனா எதுன்னு கேக்குறீங்களா? ஆரவ் ஓவியாவுக்கு குடுத்த முத்தம் பற்றி தாங்க. ஒரு முறை ஓவியா ஆரவ்க்கு முத்தம் கொடுத்ததாகவும் அவர் காதலிக்கவில்லை என்றதும் கொடுத்த முத்தத்தை திருப்பி கேட்டதாகவும் தெரிகிறது.  ஆராவ்வும் கமுக்கமாக குடுத்து விட்டு ஒன்னும் தெரியாத பிள்ளை போல நடித்துக்கொண்டிருந்தார்.


மருத்துவ முத்தம் 


        முதலில் மறுத்தாலும் பின்னர் கமல் அழுத்தி கேட்டதில் உஷாரான ஆரவ், ஓவியா மனமுடைந்து காணப்பட்டார் மற்ற ஹவுஸ் மேட்ஸ் சொன்னதால் முத்தம் குடுத்தேன் என கூறினார். ஓஹோ அப்போ மருத்துவ முத்தமா என ஒரு வார்த்தை கமல் சொல்லி இப்பொழுது இணையம் முழுக்க இதான்  ட்ரெண்ட்.



உலக நாயகனையே வம்புக்கு இழுக்கும் காயத்ரி

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here